தமிழ்நாடு

நாகர்கோவில்-காச்சிகுடா சிறப்பு ரெயில் நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2024-12-29 04:14 GMT   |   Update On 2024-12-29 04:14 GMT
  • நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
  • மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07436) அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது. அதே போல, காச்சிகுடாவில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலும் (07435) அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியில் இருந்து மார்ச் 28-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது.

காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07191) அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதியில் இருந்து மார்ச் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது. அதேபோல, மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07192) அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும் இயக்கப்படும்) நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News