தமிழ்நாடு

வாசிப்பு திறனில் அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்கியதற்கு தி.மு.க. அரசே காரணம்- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Published On 2025-01-30 11:06 IST   |   Update On 2025-01-30 11:06:00 IST
  • பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், வாசிப்புத் திறனில், அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
  • தற்போதைய அவல நிலைமைக்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின்மை, மெத்தனப் போக்கு ஆகியவைதான்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டிற்கான ஆண்டு கல்வி நிலவர அறிக்கை குறித்த ஆய்வு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில் மூன்று வயது முதல் 16 வயது வரையிலான 28,984 கிராமப்புற மாணவ, மாணவியரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 35 சதவீதம் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை என்றும், 64 சதவீதம் 5-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், 12 சதவீதம் 3-ம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டுமே 2-ம் வகுப்பு பாடங்களை படிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், வாசிப்புத் திறனில், அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. தற்போதைய அவல நிலைமைக்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின்மை, மெத்தனப் போக்கு ஆகியவைதான்.

மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக அமர்த்தி, அடுத்த ஆண்டிலாவது கிராமப்புற மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தி கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News