
கோப்புப்படம்
null
பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?
- மதுரையில், பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷா-வை சந்தித்து பேசியிருந்தார்.
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து நேரடியாக தமிழகம் வருகிறார். மதுரை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறார்.
இந்த நிலையில், மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில், பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் இணைய தொடர் முயற்சி எடுத்து வரும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷா-வை சந்தித்து பேசியிருந்தார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அமித்ஷாவை-வை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.