தமிழ்நாடு
சென்னை போயஸ் கார்டன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்
- நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறார்.
- அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பது அரசின் கடமை.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துள்ளார்.
இவர்களின் திடீர் சந்திப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், " புத்தாண்டை ஒட்டி ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பது அரசின் கடமை" என்றார்.