தமிழ்நாடு

ஐஸ்கிரீம் எளிதில் கிடைக்க நடவடிக்கை- ஆவின் நிறுவனம்

Published On 2025-01-04 09:29 GMT   |   Update On 2025-01-04 09:29 GMT
  • பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் ஐஸ்கிரீம்கள் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது.
  • ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை தங்களது நிகழ்ச்சிகளில் பயன்படுத்த அருகில் உள்ள ஆவின் பாலகத்தை அணுகி பயன் பெறலாம்.

தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்கள் தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் ஐஸ்கிரீம்களை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை தங்களது நிகழ்ச்சிகளில் பயன்படுத்த அருகில் உள்ள ஆவின் பாலகத்தை அணுகி பயன் பெறலாம்.

* தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் ஆவின் ஐஸ்கிரீமை பயன்படுத்த 9944353459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Tags:    

Similar News