தமிழ்நாடு

ஞானசேகரின் சொத்துகள் குறித்த ஆவணங்களை கேட்டு சென்னை மாநகராட்சி, பத்திரப்பதிவு துறைக்கு SIT நோட்டீஸ்

Published On 2025-01-06 14:44 IST   |   Update On 2025-01-06 14:45:00 IST
  • ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.
  • சிறப்பு விசாரணைக்குழு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குண்டம் சட்டம் பாய்ந்துள்ளது. ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்தான் சில தினங்களுக்கு முன் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது லேப்டாப் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நகைகள், சொத்துகள் வாங்கியது தொடர்பாக ஞானசேரன் மனைவிகளிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஞானசேகரன் வாங்கிய சொத்துகள் குறித்த ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அத்துடன் ஞானசேகரின் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதாக என்பது குறித்தும் எஸ்.ஐ.டி. ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Tags:    

Similar News