மேட்டூரில் 9-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- மேட்டூர் நகராட்சியில் காணப்படும் மக்களின் அடிப்படைத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
- மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் காணப்படும் மக்களின் அடிப்படைத் தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவும், சொத்துவரி நிர்ணயித்தல், வரைபட அனுமதியில் உள்ள குளறுபடிகளை உடனடியாகக் களையவும், தூய்மைப் பணியாளர்களின் குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணவும், மேட்டூர் நகராட்சி நிர்வாகத்தையும், தி.மு.க அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சேலம் புறநகர் மாவட்டத்தின் சார்பில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணியளவில், மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன் தலைமையிலும்; சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலை வருமான சு. இளங்கோவன், மேட்டூர் நகரக் கழகச் செயலாளரும், கழக மாநிலங்களவை உறுப்பினருமான சூ. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.