வாக்காளர் இறுதி பட்டியல்- அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்
- இறந்து போனவர்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 131 பேர். அவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
- இறுதி வாக்காளர் பட்டியலில் 3,740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 14 லட்சத்து 2 ஆயிரத்து 132 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 13 லட்சத்து 80 ஆயிரத்து 163 விண்ணப் பங்கள் ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
15,797 பேரின் பெயர்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்று இருந்ததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இறந்து போனவர்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 131 பேர். அவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
இறுதிப் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேர் ஆவார்கள். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பேர் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 9,120 பேர் உள்ளனர்.
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்க நல்லூர். இந்த தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 45 ஆயிரத்து 189 பேர். பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 45 ஆயிரத்து 184 பேர். மூன்றாம் பாலினத்தவர் 129 பேர்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்காளர்களை கொண்ட சிறிய தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஆகும். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 505 பேர். இவர்களில் 86,456 பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 45 பேர் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் உள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 3,740 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளனர். அதே போல் மாற்று திறனாளி வாக்காளர்கள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 7 பேர் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
திருவள்ளூர்-3531045, சென்னை-4015878, காஞ்சிபுரம்-1381710, வேலூர்-1309553, கிருஷ்ணகிரி-1660850, தர்மபுரி-1277917, திருவண்ணாமலை- 2116163, விழுப்புரம்-1716718, சேலம்-2999953, நாமக்கல்-1454272, ஈரோடு-1977419, நீலகிரி-584260, கோவை-3185594, திண்டுக்கல்-1915564, கரூர்-897739, திருச்சி- 2347852, பெரம்பலூர்- 586073, கடலூர்- 2180004, நாகப்பட்டினம்-563153, திருவாரூர்-1064640, தஞ்சாவூர்-2079096, புதுக்கோட்டை-1378514, சிவகங்கை-1214997, மதுரை-2729671, தேனி-1138599, விருதுநகர்- 1609224, ராமநாதபுரம்-1197228, தூத்துக்குடி, 1490425, திருநெல்வேலி-1403208, கன்னியாகுமரி- 1584362, அரியலூர்-528691, திருப்பூர்-2415608, கள்ளக்குறிச்சி- 1146850, தென்காசி-1361441, செங்கல்பட்டு-2747550, திருப்பத்தூர்-986796, ராணிப்பேட்டை-1058875, மயிலாடுதுறை-775458.