மற்ற மாநிலங்களில் சட்டசபை முதலிலும், முடிவிலும் தேசியக்கீதம் இசைக்கப்படுகிறது- கவர்னர் மாளிகை அதிகாரிகள்
- மராட்டிய மாநிலத்தில் சட்ட சபையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படும்.
- பெரும்பாலான மாநிலங்களில் இது கடை பிடிக்கப்படுகிறது.
சென்னை:
சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சட்டசபை கூட்டம் உள்பட முக்கிய விழாக்களில் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலிலும், முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு மராட்டிய மாநிலத்தில் சட்ட சபையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்பிறகு அந்த மாநில பாடல் இசைக்கப்படும்.
இதையடுத்து கவர்னர் உரை நிகழ்த்திய பிறகு இறுதியில் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் இசைக்கப்படும். பெரும்பாலான மாநிலங்களில் இது கடை பிடிக்கப்படுகிறது.
மாநில மொழிப் பாடல்கள் இல்லாத மாநிலங்களில் சட்டசபைகளில் முதலிலும், இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவது ஒரு மரபாகவும், விதியாகவும் கடை பிடிக்கப்படுகிறது.
இவ்வாறு கவர்னர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.