தமிழ்நாடு

படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2025-03-02 17:38 IST   |   Update On 2025-03-02 17:38:00 IST
  • தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.
  • தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்.

தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.

படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்.

தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.

தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News