தமிழ்நாடு

பொள்ளாச்சி வழியாக சென்னை-மதுரைக்கு பொங்கல் சிறப்பு ரெயில்

Published On 2025-01-11 12:36 IST   |   Update On 2025-01-11 12:36:00 IST
  • பொங்கல் சீசன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
  • மதுரையில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.

கோவை:

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சென்னை-மதுரை இடையே கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் பொங்கல் சீசன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 3 மணிக்கு புறப்படும் மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06067) நாளை காலை 5 மணிக்கு மதுரை செல்லும்.

மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து நாளை (12-ந்தேதி) இரவு 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06068) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்லும்.

இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News