தமிழ்நாடு

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனே நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2025-01-27 11:30 IST   |   Update On 2025-01-27 11:30:00 IST
  • சமூகநீதி கோட்பாட்டின்படியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதி.
  • இடஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு செய்யப்படும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 ஈகியர்களின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10.50 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் வன்னிய மக்களுக்கு மறக்கவும், மன்னிக்கவும் முடியாத துரோகத்தை செய்து விட்டு, அதை மறைப்பதற்காக இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுவதை சமூகநீதி ஈகியரே ஏற்க மாட்டார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும், சமூகநீதி கோட்பாட்டின்படியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதி. அதுதான் இடஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு செய்யப்படும் உண்மையான மரியாதையாக இருக்கும். வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை உடனடியாக பெற்று விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News