தமிழ்நாடு
அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு
- எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
- மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.