தமிழ்நாடு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய SV சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய SV சேகர்

Published On 2025-04-01 08:32 IST   |   Update On 2025-04-01 08:32:00 IST
  • நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார்.
  • அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.

பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் காரணமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 1 மாத சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது வழக்கை எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக அவர் பேசி உள்ளார்.

நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதியாக நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். ஆனால் அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை.

அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.

அவர் தன் தொடையை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடிச்சவங்கபா... இவ்வளவு இடம் இருக்கே... இங்கே உட்கார கூடாதா? என்று கூறுகிறார். அவருடைய இந்த செயல் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளது.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Tags:    

Similar News