தமிழ்நாடு
மூக்கையாத்தேவருக்கு சிலை வைக்க வேண்டும்- சட்டசபையில் செல்லூர் ராஜூ கோரிக்கை
- ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.
- மூக்கையாத்தேவரின் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கை வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தின்போது பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த பி.கே. மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது சொந்த ஊரான பாப்பாரப்பட்டியில் திருவுருவச் சிலையும், அங்கு உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் பதில் சொல்வதற்கு முன்பாக குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உறுப்பினரின் கோரிக்கையின்படி, மூக்கையாத்தேவரின் சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கை வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என கூறினார்.