தமிழ்நாடு

8 மாவட்ட மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை

Published On 2024-10-30 07:45 GMT   |   Update On 2024-10-30 07:45 GMT
  • சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
  • திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்

திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி. அரியலூர் பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News