தமிழ்நாடு

கொள்ளை முயற்சியின்போது போதையில் மொட்டை மாடியில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

Published On 2024-12-29 03:51 GMT   |   Update On 2024-12-29 03:51 GMT
  • வழக்கம் போல் அழகு நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • கிஷோர் வேறு எங்காவது இதுபோல் திருட்டில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமைந்தகரை:

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வேலை முடிந்து அழகு நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் அழகு நிலையத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அழகு நிலையத்தில் சோதனை செய்தனர். ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.

அப்போது அழகு நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து குறட்டை சத்தம் அதிகமாக வந்தது. போலீசார் மாடிக்கு சென்று பார்த்தபோது போதையில் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை போலீசார் தட்டி எழுப்பினர். போலீசாரை கண்டதும் அவர் திடுக்கிட்டு எழுந்தார்.

விசாரணையில் அவர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிஷோர் (வயது 44) என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் போதையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கிஷோர், அங்கு பணம், பொருட்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் போதையில் மொட்டை மாடிக்கு சென்று அயர்ந்து தூங்கி விட்டது விசாரணையில் தெரியவந்தது.

கிஷோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வேறு எங்காவது இதுபோல் திருட்டில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிஷோர் வேறு எங்காவது இதுபோல் திருட்டில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News