தமிழ்நாடு
சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடிய பாடகர் டி.எம். கிருஷ்ணா
- சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது.
- டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவின் தொடக்க விழாவில் பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் தந்தை பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடல் பாடினார்.
பெரியார் குறித்து டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.