விழுப்புரம்- புதுச்சேரி ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: காயமின்றி தப்பித்த பயணிகள்
- விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி புறப்பட்ட ரெயிலில் தரம் புரண்டது.
- சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரெயில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் ரெயில் நிலையத்தை தாண்டும்போது இந்த ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தில் இருந்து இறங்கி நின்றன. 5 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், ரெயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரெயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்படடனர்.
ரெயில்வே ஸ்டாஃப்கள் மற்றும் இன்ஜினீயர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயிலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக செல்லும் மற்ற ரெயில்களுக்கான வழி உடனடியாக சரி செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாரா? அல்லது சதி வேலையா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.