தமிழ்நாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை வீட்டில் அமர்ந்தபடியே பார்த்த நடிகர் வேல ராமமூர்த்தி
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது.
- வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார்.
தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அவனியாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்தபடி நடிகர் வேல ராமமூர்த்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து ரசித்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார். இதையடுத்து, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.