தமிழ்நாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை பிடித்து ரூ.1 லட்சம் பரிசு வென்ற வீரர்
- இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது.
தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் மற்றும் 2 தங்க காசுகள் பரிசு என அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த மாட்டை அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் பாய்ந்து பிடித்தார். இதனையடுத்து களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 2 தங்க காசுகள் அவருக்கு வழங்கப்பட்டது.