தமிழக பட்ஜெட்: மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு
- மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டங்கள் தொடரும்.
* மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி பெற்ற மற்ற மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மேலும் 10 இடங்களில் ரூ.800 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்கப்படும்.
* சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும்.
* விடுதியில் தலா 1000 மாணவியர் தங்கும் வகையில் ரூ.775 கோடியில் விடுதிகள் அமைக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.
* 3-ம் பாலினத்தவருக்கும் ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
* சென்னைக்கு அருகே உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும்.
* 2000 ஏக்கரில் சென்னை அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.