தமிழ்நாடு

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவை இந்த ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2025-03-14 11:33 IST   |   Update On 2025-03-14 12:02:00 IST
  • விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

* விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மிக அதிவேக ரெயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி,

* சென்னை - திண்டிவனம் - விழுப்புரம், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

* சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

* விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

Tags:    

Similar News