தமிழ்நாடு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா

Published On 2024-12-19 19:42 GMT   |   Update On 2024-12-19 19:42 GMT
  • உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னை கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடந்தது.
  • குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.

சென்னை:

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்று முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7.5 புள்ளிகள் எடுத்து சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சென்னையைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன், இந்தப் பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் செஸ் வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.

அப்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News