தமிழ்நாடு
வண்டலூர்-கேளம்பாக்கம் இணைப்பு: இருவழிச் சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்- அமைச்சர்
- வரும் ஆண்டில் திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும்.
- சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, (தி.மு.க.) கேளம்பாக்கம்-வண்டலூர் இணைப்பு சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என சட்ட சபையில் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டில் அதற்கான திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும் என்றார்.
மாடம்பாக்கம், சிட்ல பாக்கம், குறிஞ்சி நகர் பகுதி யில் கூடுதல் வீடுகள் வந்து உள்ளதால் 3 துணை மின் நிலையங்கள் அமைத்து அதில் கூடுதல் நிருவு திறன் அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.