தமிழ்நாடு
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த விஜய் திட்டம்
- தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது.
- தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது.
தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 120-லிருந்து 140 ஆக அதிகரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே த.வெ.க.வில் 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.