தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் - சீமான்

Published On 2025-02-26 17:53 IST   |   Update On 2025-02-26 17:53:00 IST
  • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
  • அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து வருகிற 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மார்ச் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன். தொகுதி மறுவரையறை தொடர்பாக 2003ம் ஆண்டே அறிக்கை விட்டிருக்கேன். இந்த விவகாரத்தில் தனித்துதான் போராடுவோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News