உலகம்

தாய்லாந்து பெண் பிரதமரின் சொத்து மதிப்பு 3,431 கோடி ரூபாய்: 200 டிசைனர்களின் பேக், 75 வாட்ச்களும் வைத்துள்ளாராம்...

Published On 2025-01-03 10:12 GMT   |   Update On 2025-01-03 10:13 GMT
  • கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்து பிரதமராக பதவி ஏற்றார்.
  • தேசிய ஊழல் எதிர்ப்பு கமிஷனிடம் சொத்து மதிப்பு மற்றும் கடன் விவரங்களை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா இருந்து வருகிறார். இவர் முன்னாள் பிரதமரும், டெலிகாம் பில்லேனியருமான தக்ஷின் ஷினவத்ராவின் இளைய மகள் ஆவார். பெண் பிரதமரான இவர் கடந்த செப்டம்பர் மாதம்தான் பதவி ஏற்றார். கடந்த 20 வருடத்தில் குடும்ப பின்னணியில் பதவி ஏற்ற 4 நபர் இவர் ஆவார்.

தேசிய ஊழல் எதிர்ப்பு கமிஷனுக்கு தனது சொத்துகள் மற்றும் கடன்களை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவருடைய கட்சி சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து பண மதிப்பின்படி அவருக்கு 13.8 பில்லியன் baht உள்ளது. இது சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய பண மதிப்பில் 3431.30 கோடி ரூபாய் ஆகும்.

இதில் 11 பில்லியன் Baht (2737 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளார். மீதமுள்ளது அவருடைய டெபாசிட்ஸ் மற்றும் கையிருப்பு தொகையாகும்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், 162 மில்லியன் baht (40.31 கோடி ரூபாய்) அளவிற்கு 75 வாட்ச்கள் வாங்கி வைத்துள்ளார். 217 கைப்பைகள் 76 மில்லியன் baht (18.91 கோடி ரூபாய்) அளவிற்கு வாங்கி வைத்துள்ளார். 200 டிசைனர்கள் வடிவமைத்த பேக்குகளை வாங்கியுள்ளார். ஜப்பான், லண்டன் உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐந்து பில்லியன் baht (1244 கோடி ரூபாய்) அளவிற்கு கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடோங்டார்ன் ஷினவத்ரா நிகர சொத்து மதிப்பு 8.9 பில்லியன் Baht (258 மில்லியன் டாலர்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடோங்டார்ன் ஷினவத்ரா தந்தையும், முன்னாள் பிரதமருமான தக்ஷின் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பின் உரிமையாளராக இருந்தவர். அதன் நிகர மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். தாய்லாந்தின் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்தார்.

Tags:    

Similar News