செய்திகள்
மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவிற்கு மோடி வாழ்த்து
மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்ட மகாதிர் முகமதுவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Modi #MahathirMohamad
புது டெல்லி:
மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்டார், அவருக்கு டுவிட்டர் வாயிலாக இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் மோடி, “மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட டாக்டர். மகாதிர் முகமதுவிற்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இரு நாடுகளின் நல்லுறவை பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேலும் வலுப்படுத்த டாக்டர். மகாதிருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். #Modi #MahathirMohamad