உலகம்

தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு கசிவு- குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

Published On 2023-07-05 23:37 GMT   |   Update On 2023-07-05 23:37 GMT
  • அவசர சேவைகளுக்கு நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது.
  • நாங்கள் சுமார் 24 இறப்புகளைக் கணக்கிட்டுள்ளோம்.

தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவசர சேவைகளுக்கு நேற்று இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தது.

மேலும், இது ஒரு வாயு வெடிப்பு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது "விஷ வாயு" கொண்ட "சிலிண்டரில் இருந்து ஏற்பட்ட எரிவாயு கசிவு" என்பதைக் கண்டுபிடித்தனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.

சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக" எரிவாயு பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

"நாங்கள் சுமார் 24 இறப்புகளைக் கணக்கிட்டுள்ளோம்" என்று அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி போக்ஸ்பர்க்கில் நடந்த சம்பவத்தில் இருந்து தெரிவித்தார்.

Tags:    

Similar News