உலகம்
null

USAID-இல் பணியாற்றும் 2,000 பேரை பணிநீக்கம் செய்த டிரம்ப்

Published On 2025-02-24 10:38 IST   |   Update On 2025-02-24 11:20:00 IST
  • அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
  • வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது.

அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது. இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர் இந்த தடையை வாஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ் நீக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை அதிபர் டிரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News