தென் கொரியாவில் பாலம் இடிந்து பயங்கர விபத்து.. 2 பேர் பலி - பகீர் வீடியோ
- பாலத்தை தாங்கி நின்ற ஐந்து 50 மீட்டர் (164.04 அடி) உயர எஃகு கட்டமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.
- 8,000 க்கும் மேற்பட்ட வெளியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
தென் கொரியாவில் விரைவு சாலை மீது கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் வீடியோ காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தென் கொரிய தலைநகர் சியோல் -இல் இருந்து தெற்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்சியோங் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுஞ்சாலை பாலத்தை தாங்கி நின்ற ஐந்து 50 மீட்டர் (164.04 அடி) உயர எஃகு தூண் கட்டமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.
தீயணைப்புத்துறை அறிக்கையின்படி, இந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், நான்கு பேர் படுகாயமடைந்தனர் மற்றும் ஒருவர் லேசான காயங்களுக்கு உள்ளானார்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள மேலும் மூன்று பேரை தீயணைப்புத் துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த தற்காலிக அதிபர் சோய் சாங் மோக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் கோரிய தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2020 முதல் 2023 வரை ஆண்டில் 8,000 க்கும் மேற்பட்ட வெளியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.