உலகம்

எதிர்கால பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி காசா - ஐரோப்பிய யூனியன் அதிரடி

Published On 2025-02-06 07:15 IST   |   Update On 2025-02-06 07:15:00 IST
  • ஐரோப்பிய யூனியன் உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
  • காசா எதிர்கால பாலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதி.

பாலஸ்தீன அரசின் இன்றியமையாத பகுதியாக காசா இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பாலஸ்தீனியர்களுக்கு இருநாட்டு தீர்வை வழங்க ஐரோப்பிய யூனியன் உறுதி கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"அதிபர் டிரம்பின் கருத்துக்களை கவனத்தில் கொண்டிருக்கிறோம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்குவதற்கான ஒரே வழி இருநாட்டு தீர்வு மட்டும் தான் என்பதை உறதியாக நம்புகிறோம். காசா எதிர்கால பாலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதி," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட காசாவை கையகப்படுத்தி, அங்குள்ள பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதிபர் டிரம்பின் கருத்துக்கு உலகளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதுதவிர அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகுவதாக அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அறிவித்தார்.

Tags:    

Similar News