இந்தியாவை ஓரங்கட்ட கனடா தேர்தலில் தலையிடும் பாகிஸ்தான் - உளவுத்துறை ரிப்போர்ட்
- இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது.
- கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
எதிர்ப்புக்கு மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்த அவர் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில், கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று எச்சரித்தார். மேலும் ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியா, காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுடன் கசப்பான உறவை கொண்டுள்ளதால் தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என கனடா கணித்துள்ளது.
அதே நேரத்தில், பாகிஸ்தானில் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை எதிர்ப்பதற்கும் அதன் மூலோபாய நோக்கங்காக, கனடா பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடக்கூடும் என்று கனடா தெரிவித்துள்ளது.