உலகம்

தரையில் வைக்கப்பட்ட தேசிய கொடி.. பார்த்ததும் மோடி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

Published On 2023-08-24 09:24 GMT   |   Update On 2023-08-24 09:24 GMT
  • பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, அவர்கள் நாட்டு கொடியை கையில் எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுத்தார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுக்காமல் தனது சட்டைப்பையிலேயே வைத்துக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News