உலகம்

2020-ம் ஆண்டில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது: அதிபர் புதின்

Published On 2025-01-24 22:58 IST   |   Update On 2025-01-24 22:58:00 IST
  • ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
  • கடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது என்றார் புதின்.

மாஸ்கோ:

அமெரிக்க அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார். அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஏற்பட்டிருக்கவே இருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்தவேண்டும். உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஷியா முன்வர வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிரம்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், அப்போது அதிபராக இருந்திருந்தால் 2022-ல் உக்ரைன் போர் வந்திருக்காது. டிரம்ப் புத்திசாலி நபர் மட்டுமல்ல, ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட. அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News