உலகம்

தென் கொரியாவில் விமான விபத்தில் 179 பேரின் உயிரை குடித்த கான்கிரீட் சுவர் அகற்றம்

Published On 2025-01-23 09:38 IST   |   Update On 2025-01-23 09:38:00 IST
  • 181 பேருடன் சென்ற இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது.
  • மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து கருகி எரிந்தது.

சியோல்:

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து கடந்த 29-ந்தேதி தென்கொரியாவின் முவான் நகருக்கு விமானம் ஒன்று இயக்கப்பட்டது. விமான சிப்பந்திகள் உள்பட 181 பேருடன் சென்ற இந்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஓடுதளத்தில் உரசியவாறு அங்கே அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சுவர் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து கருகி எரிந்தது. இந்த விபத்தில் 179 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 2 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த கோர விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விமான விபத்துக்கு விமான நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவரும் காரணம் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 179 பேரை உயிரை குடித்த அந்த சுவரை உடனடியாக இடித்து தகர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News