உலகம்

அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட துணை ஜனாதிபதி

கத்தாரில் தேசிய அருங்காட்சியகத்தை பாா்வையிட்டார் வெங்கையா நாயுடு

Published On 2022-06-06 13:48 GMT   |   Update On 2022-06-06 13:48 GMT
  • கத்தாா் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்று உள்ளாா்.
  • இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்துப் பேசினார்.

தோகா:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கான தமது சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமரும் உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்து பேசிய வெங்கையா நாயுடு, கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது. அது வளமடைந்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும், இந்தியா-கத்தார் வணிக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், அங்கு வாழும் இந்திய தொழிலதிபா்களைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தோகாவில் உள்ள கத்தாா் தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று பாா்வையிட்டாா்.

Tags:    

Similar News