உலகம்
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
- தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.
- கைதான மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.
இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்து சென்ற நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கைதாகி இருக்கும் மீனவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.