அல்பேனியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை
- பிரபல சமூகவலைதளமான டிக்-டாக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- அரசின் இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டு இருப்பதாக டிக்-டாக் செயலியின் பைட் டான்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியது.
டிரானா:
ஐரோப்பாவின் தென்கிழக்கே அமைந்துள்ள பால்கன் வளைகுடா நாடு அல்பேனியா. இங்கு பிரபல சமூகவலைதளமான டிக்-டாக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவனை சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவர்களிடையே வன்முறையை தூண்டுவதாக கூறி டிக்-டாக் செயலிக்கு அல்பேனியா அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஓராண்டுக்கு தொடரும் என பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசின் இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டு இருப்பதாக டிக்-டாக் செயலியின் பைட் டான்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியது.
இதற்கு பதிலளித்து பேசுகையில், அரசின் இந்த முடிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பலமுறை சந்திப்புக்கு பின்னரே எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் எடி ராமா கூறினார்.