null
வீடியோ: விமான நிலையத்தில் டீ-சர்ட் அணிந்து கடத்தி வரப்பட்ட கொரில்லா குட்டி மீட்பு
- உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவர முயன்ற கொரில்லா குட்டியை துருக்கி அதிகாரிகள் மீட்டனர்.
- இந்த விலங்கு தேசிய பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்படுகிறது.
இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஆவணங்கள் இல்லாமல் கடத்தப்பட்ட கொரில்லா குட்டியை துருக்கி அதிகாரிகள் மீட்டனர். அழிந்து வரும் அந்த கொரில்லாவை துருக்கி அதிகாரிகள் காப்பாற்றும் வீடியோவை அந்நாட்டின் வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் அதிகாரிகள் கொரில்லாவை கூண்டில் இருந்து எடுத்து, உணவளிப்பதைக் காணலாம்.
மேலும் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வர்த்தக அமைச்சகத்தின் சுங்க அமலாக்க குழுவினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி நம் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற கொரில்லா குட்டி ஒன்று கைப்பற்றப்பட்டது.
எங்கள் ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வரும் குட்டியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால் அது தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படும் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, இந்த விலங்கு தேசிய பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் கொரில்லா நிரந்தரமாக எங்கு வைத்து பராமரிக்கப்படும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.