உலகம்

இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்: ஈரான் கடும் கண்டனம்

Published On 2024-12-25 01:17 GMT   |   Update On 2024-12-25 01:17 GMT
  • இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம்.
  • ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இந்த ஆண்டு கொன்றது குறித்த ஒப்புதல் இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இந்த கொடூரமான குற்றத்திற்கு இஸ்ரேலிய ஆட்சி தனது பொறுப்பை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது வெட்கக்கேடான செயல்" என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹனியே கொலைக்கு தனது நாடு தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்டார். கொன்று குவித்தது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.

காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய ஹனியே, ஜூலை 31ம் தேதி தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் கொல்லப்பட்டார். 

Tags:    

Similar News