null
மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷிய கப்பல்
- 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரில் இந்து கடந்த 12ம் தேதி விளாடிவொஸ்டோக் நகரில் உள்ள துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 16 மாலுமிகள் பயணித்தனர்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி மத்திய தரைக்கடல் வழியாக கடல் வழியாக கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஸ்பெயினின் அகுலியாஸ், அல்ஜீரியாவின் ஓரன் நகர்களுக்கு அருகே சர்வதேச கடல்பரப்பில் மத்திய தரைக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலின் எஞ்சின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த ஸ்பெயின் கடற்படையினர் மற்றும் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பிற கப்பல்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ரஷிய கப்பலில் இருந்து 14 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேவேளை, 2 மாலுமிகள் கடலில் விழுந்த நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட மாலுமிகள் ஸ்பெயினின் கார்டகினா நகருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் ரஷியாவுக்கு திரும்பி அனுப்பப்பட உள்ளனர். அதேவேளை, தீப்பற்றிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.