உலகம்

தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்த உலகின் முதல் 'இமாம்' சுட்டுக் கொலை..

Published On 2025-02-16 16:04 IST   |   Update On 2025-02-16 16:04:00 IST
  • ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
  • முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின

உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(57) சுட்டுக் கொல்லப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா(Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள்  வழியைத் தடுத்தது. முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 

இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் தப்பித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்தது.

"முஹ்சின் ஹென்ட்ரிக்ஸின் கொலைச் செய்தியால் ILGA வேர்ல்ட் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. வெறுப்பு காரணமாக நடந்த குற்றம் என இதை நாங்கள் அஞ்சுகிறோம். அதிகாரிகள் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று அதன் நிர்வாக இயக்குனர் ஜூலியா எர்ஹார்ட் தெரிவித்துள்ளார். 

பல்வேறு LGBTQ ஆதரவு குழுக்களில் PANIYATRIYAஹென்ட்ரிக்ஸ், 1996 இல் ஓரினச்சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்திருந்தார். 

Tags:    

Similar News