null
அமெரிக்கா நாடு கடத்தும் எந்த நாட்டவராக இருந்தாலும் கோஸ்டா ரிகா ஏற்றுக்கொள்ளும் - ஆனால்..
- எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
- அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணமில்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் பணியில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். நாடு கடத்தல் உத்தரவை ஏற்க அடிபணியாத நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா, நாடு கடத்தப்படும் எந்த நாட்டை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவைகளை நாடு கடத்துவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க கோஸ்டாரிகா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இவர்கள் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து வருபவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களின் முதல் குழு புதன்கிழமை கோஸ்டாரிகாவில் ஒரு வணிக விமானத்தில் வந்து சேரும். அங்கு அவர்கள் பனாமா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பின்னர் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம். இந்த செயல்முறைக்கான செலவுகளை சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) மேற்பார்வையின் கீழ் அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.