உலகம்
நோயை கட்டுப்படுத்த இப்படியும் வினோதம்- ஒரு கொசு பிடித்து கொடுத்தால் ரூ.1.50 பரிசு
- நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.
- ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகர் அருகே உள்ள கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 பேர் சமீபத்தில் இறந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் கொசுவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக ஒரு கொசுவை பிடித்து கொடுத்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நூதன அறிவிப்பால் பலர் கொசுவை பிடித்து கொடுத்து பணம் வாங்கி சென்றனர்.
இதனால் ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.