உலகம்
எகிப்தில் 3,500 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
- நைல் நதி அருகே உள்ள தீப்ஸ் மலைப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
- கி.மு.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் துட்மோஸ் என்ற மன்னரின் கல்லறையாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கெய்ரோ:
உலகின் பழமையான நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகமும் ஒன்று. அங்கு அகழ்வாராய்ச்சியின்போது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் சான்றுகளும் அதனை உறுதி செய்கின்றன.
அந்தவகையில் நைல் நதி அருகே உள்ள தீப்ஸ் மலைப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு பழமை வாய்ந்த கல்லறை ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆராய்ச்சி செய்தபோது கி.மு.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் துட்மோஸ் என்ற மன்னரின் கல்லறையாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.