கருப்பு வைரம் கலந்த நெயில் பாலிஷ்... விலை எவ்வளவு தெரியுமா?
- பொதுவாக பெண்கள் சிலர் நகங்களை பராமரித்து பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்வார்கள்.
- உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த பொருட்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் விலை உயர்ந்த கார், விலை உயர்ந்த ஆடைகள், காலணிகள், அணிகலன்கள் போன்றவற்றை கேள்விபட்டிருப்போம். அதனை வி.ஐ.பி.கள் சிலர் அதிக தொகை கொடுத்து வாங்குவதும் உண்டு. அந்த வரிசையில் தற்போது 'நெயில் பாலிஷ்' இடம்பெற்றுள்ளது.
பொதுவாக பெண்கள் சிலர் நகங்களை பராமரித்து பல வண்ணங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களில் நெயில் பாலிஷ் அறிமுகமாகி வருகிறது.
அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை ரூ.1 கோடியே 63 லட்சத்து, 66 ஆயிரம் ஆகும். லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கிய இந்த நெயில் பாலிஷ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அதன் உள்ளே 267 கார்ட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருக்கும்.