உலகம்
மது குடிக்கும் போட்டி: நண்பர்களின் சவாலால் உயிரை விட்ட யூடியூப் பிரபலம்
- புத்தாண்டை கொண்டாட சென்ற காந்தேவுக்கு நண்பர்கள் ஒரு சவால் விட்டுள்ளனர்.
- 20 நிமிடத்திற்குள் 2 மதுப்பாட்டில்களை முழுவதுமாக குடித்து முடித்தால் ரூ.75 ஆயிரம் தருவதாக சவால் விட்டுள்ளனர்.
தாய்லாந்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம், யூட்யூப் பிரபலம் 21 வயதான காந்தீ. அவர் புத்தாண்டை ஒரு சவாலோடு தொடங்கியுள்ளார். நண்பர்களோடு புத்தாண்டை கொண்டாட சென்ற காந்தேவுக்கு நண்பர்கள் ஒரு சவால் விட்டுள்ளனர்.
அதன்படி, காந்தீ 20 நிமிடத்திற்குள் 2 மதுப்பாட்டில்களை முழுவதுமாக குடித்து முடித்தால் ரூ.75 ஆயிரம் தருவதாக சவால் விட்டுள்ளனர். சவாலை ஏற்றுக் கொண்ட காந்தேவும் 350 மி.லி கொள்ளளவு கொண்ட 2 விஸ்கி பாட்டில்களை வாங்கி வேகவேகமாக குடித்துள்ளார்.
குடித்து முடித்த சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மது போதையில் இருந்த அவருக்கு சரியான சிகிச்சைகள் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.