புதுச்சேரி

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடைபெற்ற காட்சி.

கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Published On 2022-10-20 04:19 GMT   |   Update On 2022-10-20 04:19 GMT
  • ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • விழாவிற்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்கத் தலைவராக ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக பக்தவச்சலம், அன்பரசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இதற்கான பதவியேற்பு விழா கிருமாம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு, முத்தாலம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவர் அன்புராஜ், ராமலிங்கம், தணிகைவேல், வைத்தியநாதன், முருகன், ஆசிரியர்கள் மணிபாலன், விவேகானந்தன் பிள்ளையார்குப்பம் பெருமாள், கிருஷ்ணதாஸ், மணிபாலன், ஜெயபாலன், பிரணாவ்மூர்த்தி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News